கிரிக்கெட் (Cricket)
null

மீண்டும் சி.எஸ்.கே.-வில் இணையும் சுரேஷ் ரெய்னா?

Published On 2025-02-21 14:58 IST   |   Update On 2025-02-21 14:59:00 IST
  • அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
  • தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் உள்ளார்.

இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. அதிரடி ஆட்டக்காரரான இவர் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது தொகுப்பாளராக இருக்கும் சுரேஷ் ரெய்னா மீண்டும் சி.எஸ்.கே. அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமங் இருந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி, பந்துவீச்சு ஆலோசகராக எரிக் சிமோன்ஸ் மற்றும் பீல்டிங் / பேட்டிங் பயிற்சியாளராக ராஜீவ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் பீல்டிங் பயிற்சியாளராக 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News