கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியிலும் வெற்றி.. வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

Published On 2024-12-11 05:50 GMT   |   Update On 2024-12-11 05:50 GMT
  • வங்காளதேசம் அணி227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.
  • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரண்டன் கிங் 82 ரன்களை அடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்சில் உள்ள பசாட்ரே நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் மகமதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 33 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடாகேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரண்டன் கிங் 82 ரன்களையும், லீவிஸ் 49 ரன்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 12) நடைபெறுகிறது.

முன்னதாக இரு அணிகள் இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News