கிரிக்கெட் (Cricket)
முதல் 20 ஓவர் போட்டி: வெஸ்ட் இண்டீசை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்
- வங்கதேசம் தரப்பில் மகேதி ஹசன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
- 3 போட்டிக் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.
கிங்ஸ்டன்:
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. சவுமியா சர்க்கார் அதிகபட்சமாக 32 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 7 ரன்னில் வெற்றி பெற்றது. கேப்டன் போவல் 35 பந்தில் 60 ரன் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். மகேதி ஹசன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. 2-வது ஆட்டம் 18-ந்தேதி நடக்கிறது.