கால்பந்து

700 கிளப் வெற்றிகள் - புது மைல்கல் எட்டிய ரொனால்டோ

Published On 2025-02-04 11:39 IST   |   Update On 2025-02-04 11:39:00 IST
  • நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.
  • ஸ்போர்டிங் சிபி அணிக்காக 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் கால்பந்து தொடரில் அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஆட்டத்தில் 39 வயதான ரொனால்டோ தொடர்ந்து 2 கோல்களை அடித்து அசத்தினார். அல் வாசில் அணிக்கு எதிராk நடந்த இப்போட்டியில் அல் நாசர் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இது கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்ற 700-வது கிளப் போட்டியாக அமைந்தது. இன்னும் இரு தினங்களில் ரொனால்டோ தனது 40-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த நிலையில், அவர் நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்துள்ளார்.

 


ஐந்து முறை பாலன் டி'ஓர் விருது வென்றுள்ள ரொனால்டோ கடந்த ஆகஸ்ட் 2002 இல் தனது தொழில்முறை வாழ்க்கையை தொடங்கி வெற்றிகளை குவித்து வருகிறார். 2003 இல் ஓல்ட் டிராஃபோர்டு அணிக்கு வரும் முன்பு ரொனால்டோ ஸ்போர்டிங் சிபி அணிக்காக விளையாடி 13 ஆட்டங்களில் வென்றுள்ளார்.

யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார். இவற்றில் ரியல் மாட்ரிட்டில் தான் ரொனால்டோ தனது பெரும்பாலான வெற்றிகளை பெற்றார். அவர் லாஸ் பிளாங்கோஸ் அணிக்காக 315 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உட்பட 15 பட்டங்களை வென்றுள்ளார்.

ரொனால்டோ ஆகஸ்ட் 2021-இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்புவதற்கு முன்பு மூன்று சீசன்களில் ஜுவென்டஸ் அணியுடன் 92 ஆட்டங்களில் வென்றார். இன்டர் மியாமி ஃபார்வர்ட் லியோனல் மெஸ்ஸி 613 கிளப் கேரியர் கிளப் ஆட்டங்களில் வென்றுள்ளார். இதில் பார்சிலோனாவுடன் 542 கோல்களும் அடங்கும்.

ஜனவரி 30 ஆம் தேதி வரை ரொனால்டோ 921 கோல்களை அடித்துள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் அவர் தனது கேரியரில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனது 30 வயது வரை 463 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ 30 வயதுக்கு பிறகு 460 கோல்களை அடித்துள்ளார்.

உலகளவில் அதிக சர்வதேச கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 135 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். 

Tags:    

Similar News