பார்முலா 4 கார் பந்தயம்- வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய உதயநிதி
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
- திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
சென்னை:
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை ஆர்வமாக திரையுலகினர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு கண்டுகளித்தனர்.
நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.