விளையாட்டு

பெங்களூரில் செயல்பட்டு வரும் விராட் கோலியின் "பப்"க்கு 2வது முறை நோட்டீஸ்

Published On 2024-12-21 10:33 GMT   |   Update On 2024-12-21 10:33 GMT
  • கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது.
  • பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலிக்கு சொந்தமாக 'One8 Commune' என்கிற பார் மற்றும் உணவகம் இயங்கி வருகிறது.

இது, எம்ஜி சாலையின் அருகே காஸ்டர்பா சாலையில் உள்ள ரத்னம்ஸ் வளாகத்தின் 6வது மாடியில் அமைந்துள்ளது. இந்த பப் தீ பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் என்ஓசி இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், தீ பாதுகாப்பு மீறல்களுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி கோலியின் பப்பிற்கு தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக நோட்டீஸ் அனுப்பியது.

சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி அதிகாரடிகள் நடவடிக்கை எடுத்தனர். முதல் முறையாக கடந்த நவம்பர் 29ம் தேதி அன்று கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது. ஆனால், கோலி தரப்பில் இருந்து பதில் இல்லை.

இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி கோலிக்கு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, One8 Commune பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News