விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பரபரப்பான ஆட்டத்தில் பிரணாய் தோல்வி

Published On 2025-01-09 15:19 IST   |   Update On 2025-01-09 15:19:00 IST
  • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
  • முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

கோலாலம்பூர்:

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.

முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பாக சென்றது. இந்த செட்டில் 23-21 என்ற கணக்கில் லி ஷிஃபெங் வெற்றி பெற்றார்.

இதனால் லி ஷிஃபெங் 21-6, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரணாய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சீன வீரர் முதல் சுற்றில் இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவதை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News