விளையாட்டு

ஆசிய வாள்வீச்சு போட்டி- தமிழக வீரர் பெபிட் தேர்வு

Published On 2022-09-05 14:57 IST   |   Update On 2022-09-05 14:57:00 IST
  • கன்னியாகுமரியை சேர்ந்த அவர் சேபர் தனிபர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
  • இதனால் பெபிட் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.

சென்னை:

23 வயதுக்குட்பட்டவருக்கான ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை குவைத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டிகள் கடந்த 2 தினங்களாக பாட்டி யாலா, புனே, குஜராத்தில் நடந்தது.

தமிழக வீரர் பி.பெபிட் இந்த தேர்வு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிய போட்டிக்கு தேர்வு பெற்றார். கன்னியாகுமரியை சேர்ந்த அவர் சேபர் தனிபர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதனால் பெபிட் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News