டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற சினியாகோவா, டவுன்சென்ட் ஜோடி
- மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான செக் நாட்டின் கேடரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ-தைவானின் ஹ்சீஹ் சு ஜோடியுடன் மோதியது.
இதில் சினியாகோவா ஜோடி 6-2, 6-7 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.