டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னெர்

Published On 2025-01-24 17:28 IST   |   Update On 2025-01-24 17:28:00 IST
  • சின்னெர் 7-2, 6-2,6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
  • 26-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) - பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் சின்னெர் 7-2, 6-2,6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 26-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.

Tags:    

Similar News