டென்னிஸ்

டேவிஸ் கோப்பை: இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெற்றி

Published On 2025-02-02 15:17 IST   |   Update On 2025-02-02 15:17:00 IST
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.

புதுடெல்லி:

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை பெற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ரித்விக் சவுத்ரி போலிப்பல்லி ஜோடி, டோகோ ஜோடியை 6-2, 6-1 என எளிதில் வீழ்த்தியது. இந்தப் போட்டி 57 நிமிடங்களில் முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News