டென்னிஸ்
வின்ஸ்டன் சலேம் ஓபன்: தக்ஷிணேஸ்வரர் சுரேஷ் ஜோடி அரையிறுதியில் தோல்வி
- அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
- இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ-நாதனியல் லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.