டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜாக் டிராபர்
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது.
- இதன் இறுதிச்சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜாக் டிராபர் 6-2, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.