டென்னிஸ்

அமெரிக்க ஓபன்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

Published On 2024-09-09 01:49 GMT   |   Update On 2024-09-09 01:49 GMT
  • 2024-ன் ஆஸ்திரேலியா ஓபனை சின்னர் ஏற்கனவே கைப்பற்றிருந்தார்.
  • விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதியுடன் ஏமாற்றம் அடைந்தார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பிரபலமான அமெரிக்கா ஓபன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஹாரி ப்ரிட்ஸை எதிர்கொண்டார்.

இந்தில் 6-3, 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். முதல் சர்வீஸில் சின்னர் 88 சதவீதமும், பிரிட்ஸ் 68 சதவீதமும் வெற்றி பெற்றனர். 2-வது சர்வீஸில் சின்னர் 54 சதவீதமும், பிரிட்ஸ் 48 சதவீதமும் வெற்றி பெற்றனர்.

பிரேக் பாயிண்டில் சின்னர் (6/12) என ஆதிக்கம் செலுத்தினர். பிரிட்ஸ் 2/7 பிரேக் பாயிண்ட் பெற்றிருந்தார். சின்னர் மொத்தமாக 96 முறை பாயிண்ட்ஸ் வென்றார். பிரிட்ஸ் 79 முறை வென்றார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சின்னர், தற்போது முதன்முறையாக அமெரிக்க கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதியுடன் வெளியேறினார்.

முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சபலென்கா 7-5, 7-5 என பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Similar News