டென்னிஸ்
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, செக் வீராங்கனை மேரி பசவுஸ்கோவாவை சந்திக்கிறார்.