விளையாட்டு

வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் வழங்க அமெரிக்க மல்யுத்த ஜாம்பவான் கோரிக்கை

Published On 2024-08-08 01:29 GMT   |   Update On 2024-08-08 01:29 GMT
  • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
  • ஜோர்டான் 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க மல்யுத்த ஜாம்பவான் ஜோர்டான் பர்ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

மல்யுத்த போட்டியில் 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், லண்டன் 2012 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜோர்டான் பர்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

1. வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச மல்யுத்த சம்மேளனம், தங்களது விதிகளை மாற்ற வேண்டும்

2. இரண்டாவது நாள் எடையை பரிசோதிக்கும் போது குறைந்தபட்சம் அனுமதிக்கப்பட்ட எடையை விட ஒரு கிலோ கூடுதலாக இருக்கலாம் என்று விதியை மாற்ற வேண்டும்.

3. தற்போது மல்யுத்த போட்டிகளுக்கான எடை காலை எட்டு முப்பது மணிக்கு பரிசோதிக்கப்படுகிறது. இதனை 10:30 மணிக்காக மாற்ற வேண்டும்.

4. எடை பரிசோதனையில் வீரர் தோல்வியை தழுவி விட்டால் அந்தப் போட்டியை கைவிட்டு எதிர் வீரருக்கு தங்கப் பதக்கத்தையும் எடை தேர்வில் தோல்வியடைந்த வீரருக்கு வெள்ளி பதக்கத்தையும் வழங்க வேண்டும்.

5. வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும்.

என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News