செய்திகள்
சென்னையில் மாயமான ராணுவ விமானத்தை தூத்துக்குடி கடல் பகுதியில் தேடும் பணி தீவிரம்
சென்னையில் மாயமான ராணுவ விமானத்தை தூத்துக்குடி கடல் பகுதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு சென்ற ராணுவ விமானம் நேற்று காலை மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் கடற்படை கப்பல்கள் மற்றும் படகுகள், விமானப்படை விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியிலும் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமானம் கடலில் விழுந்திருந்தால் நீரோட்டம் மூலம் தூத்துக்குடி கடல் பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த தேடும் பணி நடந்து வருகிறது.
இதற்காக தூத்துக்குடி கடலோர காவல்துறையினர் படகு மூலம் கடலுக்குள் சென்று தேடி வருகின்றனர். மேலும் மீனவர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மீன் பிடிக்கும் போது விமானத்தின் பாகங்கள் ஏதாவது மிதப்பது தெரியவந்தால் உடனடியாக கடலோர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.