செய்திகள்
ஊட்டியில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 11 போலீசார் காயம்
ஊட்டியில் போலீசார் சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்ததில் 11 பேர் காயம் அடைந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் குன்னூர் ரெயில் நிலையத்தின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஒரு வேனில் ஊட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தனர். வேன் அருவங்காடு - எல்லாநல்லி இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது மிகவும் குறுகலான வளைவில் திம்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஆமை போல் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வேன் தலைகீழாக கவிழ்ந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.