செய்திகள்

என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Published On 2017-05-31 12:13 IST   |   Update On 2017-05-31 12:13:00 IST
ஆன்-லைனில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் விண்ணப்பத்தை பதிவு செய்வது இன்று கடைசி நாள் ஆகும்.

சென்னை:

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 554 கல்லூரிகள் உள்ளன. இவைகளில் 2 லட்சம் இடங்கள் உள்ளன.

அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன.

தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்குக்கு வழங்க வேண்டும்.

2017-18-ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் ஏப்ரல் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டது.

மே 1-ந்தேதி விண்ணப்ப படிவம் பதிவு தொடங்கியது. பல மாணவ - மாணவிகள் இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து வைத்து இருந்தனர். கடந்த 12-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு மதிப்பெண்களை ஏற்கனவே இணைய தளத்தில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தனர்.

சில மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு இணைய தளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிந்தனர்.

ஆன்-லைனில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் விண்ணப்பத்தை பதிவு செய்வது இன்று கடைசி நாள் ஆகும்.

இதுவரை 1½ லட்சம் மாணவ - மாணவிகள் ஆன்-லைனில் பதிவு செய்து உள்ளனர்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வருகிற ஜூன் 3-ந்தேதி கடைசி நாள்.

விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து, ‘செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மி‌ஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600 025’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Similar News