செய்திகள்

தாம்பரம்-செங்கோட்டைக்கு சிறப்பு கட்டண ரெயில்: நாளை முதல் இயக்கம்

Published On 2017-09-14 10:32 IST   |   Update On 2017-09-14 10:32:00 IST
தாம்பரம்-செங்கோட்டைக்கு சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்தில் இருந்து நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06071) தாம்பரத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வருகிற 16, 18, 20 முதல் 23-ந்தேதி வரை மற்றும் 25, 27 முதல் 29-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் காலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06072) செங்கோட்டையில் இருந்து வருகிற 16, 17, 19, 21 முதல் 24-ந்தேதி வரை மற்றும் 26, 28 முதல் 30-ந் தேதி வரை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Similar News