செய்திகள்

சொந்த ஊரில் வளர்த்தவரை மறக்காத கமல்

Published On 2018-02-22 10:30 GMT   |   Update On 2018-02-22 10:30 GMT
தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவ்வளவு கூட்டத்திலும் தன்னை சிறு வயதில் வளர்த்த பெரியவரை அடையாளம் கண்டு கமல்ஹாசன் காருக்குள் ஏற்றிக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கமல்ஹாசன் நேற்று ராமேசுவரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அரசியல் பயணத்தை தொடங்கியதும், சொந்த ஊரான பரமக்குடி வந்தார். அங்கு ரசிகர்கள் பெருமளவில் திரண்டு ஆரவாரம் செய்து வரவேற்றனர். அவரது கார் நகர முடியாமல் திணறியது. அப்போது சாலையில் நின்றிருந்த வயதானவரை பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்னார்.

திடீரென்று கார் கதவை திறந்து இறங்கிச் சென்ற கமல் வயதானவரை நோக்கிச் சென்று அவரை அழைத்து தன்னுடன் அணைத்துக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டார். எதற்காக அவரை அழைத்தார் என்று புரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர்.

இவர் தன்னை சிறு வயதில் இருந்தே வளர்த்த ராமசாமி என்று அறிமுகம் செய்தார். அவருடன் சிறிது தூரம் காரில் பயணம் செய்தபடியே பேசிக் கொண்டு சென்றார்.

பின்னர் பரமக்குடியை தாண்டியதும் அவரை கீழே இறக்கி அனுப்பி வைத்தார். அவ்வளவு கூட்டத்திலும் தன்னை சிறு வயதில் வளர்த்த பெரியவரை அடையாளம் கண்டு காருக்குள் ஏற்றிக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #tamilnews

Similar News