செய்திகள்
வருகை பதிவு எந்திரம்

அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு

Published On 2019-07-18 08:36 IST   |   Update On 2019-07-18 08:36:00 IST
அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்க்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய எந்திரத்தில் தங்களது கைரேகையை பதிவு செய்வார்கள். அப்போது ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை அந்த எந்திரம் காண்பித்து பதிவு செய்யும். பின்னர் ஆதார் எண்களில் கடைசி 8 எண்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோல் பள்ளி நேரம் முடிந்து வெளியே செல்லும்போதும் கைரேகையை பதிவு செய்வார்கள்.



இதற்காக அந்த எந்திரத்தில் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் திரையில் காண்பிக்கும். இந்தநிலையில் அந்த எந்திரத்தில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே தெரிகிறது. இதை ஆசிரியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தமிழ் எழுத்துகள் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News