செய்திகள்
திருவள்ளூரில் கொரோனா வார்டில் நோயாளி தற்கொலை
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவமனை வளாகத்தில் 62 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.