செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

Published On 2020-07-23 11:58 IST   |   Update On 2020-07-23 11:58:00 IST
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,520-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 38,28ரூபாயாக இருந்த நிலையில் இன்று 240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,520-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.42 உயர்ந்து, ரூ.4,815 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 65,700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,700 உயர்ந்து 68,400 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News