தமிழ்நாடு
234 தொகுதிகளிலும் பாதயாத்திரை நடத்த தயாராகும் அண்ணாமலை
- தமிழக அரசியலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் பாத யாத்திரை அமையும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- பாத யாத்திரை நிறைவு பெறும் சமயத்தில் ஊழல் பட்டியலை வெளியிட அண்ணாமலை தரப்பில் தயாராகி வருகிறார்கள்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 2023-ம் ஆண்டு அதிரடி அரசியல் நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு உள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் தொட்டு செல்லும் வகையில் பாத யாத்திரை நடத்த அண்ணாமலை முடிவு செய்து உள்ளார். அவரது பாத யாத்திரை பயண பாதை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசியலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பாத யாத்திரை அமையும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாத யாத்திரை நிறைவு பெறும் சமயத்தில் ஊழல் பட்டியலை வெளியிடவும் அண்ணாமலை தரப்பில் தயாராகி வருகிறார்கள்.