தமிழ்நாடு

கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது- நீதிமன்றம்

Published On 2022-11-25 21:33 IST   |   Update On 2022-11-25 21:33:00 IST
  • திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
  • 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி:

திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

Similar News