தமிழ்நாடு
பயணிகளின் வருகை அதிகரிப்பு- மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் மாற்றம்
- நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.