சிவபெருமான் முழு நிலவை சூடி இருப்பதுபோல் தோன்றிய அதிசய காட்சி
திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்- அதிசய காட்சி கண்டு பரவசம்
- ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வலம் வந்தனர்.
- பவுணர்மியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக படைவீடாக போற்றப்படும் கோவில் அமைந்துள்ளது. இங்குதான் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது என்பது புராண தகவல்.
பழமை வாய்ந்த இந்த கோவில் மலையில் அமைந்துள்ளது. இந்த மலையை பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வலம் வருவது வழக்கத்தில் உள்ளது.
ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வலம் வந்தனர். அப்போது மலை ஒரு சிவலிங்கம் போலவும், அதன் சிகர பகுதியில் பவுர்ணமி நிலவு காட்சி அளித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இதனை பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் சிவபெருமான் பிறை நிலவை சூடி இருப்பார். ஆனால் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமான் முழு நிலவை சூடி இருப்பதுபோல் அதிசய காட்சியை கண்டு மெய்சிலிர்த்தோம் என்று தெரிவித்தனர்.
பவுணர்மியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கிரிவல பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.