தமிழ்நாடு

மது ஒழிப்பு மாநாடு முறையாக அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து முடிவு- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-09-18 11:49 IST   |   Update On 2024-09-18 11:49:00 IST
  • இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
  • விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா?

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து கலந்து கொள்வது சம்பந்தமாக தெரிவிக்கப்படும். நடிகர் விஜயும் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா? அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எனவே விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் பா. மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News