வீடு இடிந்து கிடக்கும் காட்சி.
சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் காயம்
- கியாஸ் கசிந்ததால் குபீரென தீப்பிடித்தது. இதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தது.
- தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது வீட்டின் முதல் மாடியில் மாணிக்கம் (வயது 63) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி.
இவர் இன்று காலை வீட்டில் காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிந்ததால் குபீரென தீப்பிடித்தது. இதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த மாணிக்கம் (63), ராஜேஷ்வரி (59) மற்றும் இவர்களது மகள்கள் பிரியா (36), பானுமதி (33) மற்றும் இவர்களது குழந்தைகள் அவினேஷ் (8), சச்சின் (5) உள்பட பேருக்கும் தீக்காயம் மற்றும் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் ரத்த காயமும் ஏற்பட்டது. இதனால் வலியால் அலறி துடித்தனர். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த அமாப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று 7 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் கு றித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்து ஆறுதல் கூறியதுடன் உடல் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.