தமிழ்நாடு
அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
- நமது நாடு உலக அளவில் முன்னோக்கி செல்கிறது.
- 18-ம் நூற்றாண்டில் ஜவுளித்துறையில் இந்தியா முன்னணியில் இருந்தது.
சென்னை:
சென்னை தரமணியில் உள்ள நிப்ட் எனப்படும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டம் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நமது நாடு உலக அளவில் முன்னோக்கி செல்கிறது. எனவே அடுத்த 25 ஆண்டுகள் கடுமையாக இருக்கும். நாடு முன்னேற மாணவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
18-ம் நூற்றாண்டில் ஜவுளித்துறையில் இந்தியா முன்னணியில் இருந்தது. 2 ஆயிரம் ஆண்டுகளாக உலக சந்தையில் இந்தியா முன்னணியில் இருந்தது. அதை மீண்டும் சீர் செய்ய முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.