தமிழ்நாடு

ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு தடையா? : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2024-05-13 16:23 GMT   |   Update On 2024-05-14 08:28 GMT
  • தமிழ்நாட்டில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
  • இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் பழைய மரக்காணம் என்ற கிராமத்தில் கடந்த 18-ந் தேதி கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஏற்கனவே மக்களவை தேர்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஆகவே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பை ஏற்க முடியாது என்று கூறி மனுதாரரின் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News