தமிழ்நாடு

இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹாசிவராத்திரி!

Published On 2023-02-15 05:42 GMT   |   Update On 2023-02-15 05:56 GMT
  • தைப்பூசம், மஹாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர நிகழ்வுகள் விஞ்ஞான முறையிலும் மெய்ஞான முறையிலும் நம்மை மெருகேற்ற உதவும் நாட்களாகும்.
  • இன்று உலகமே கவனிக்கும் விதமாக ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது.

ஆன்மீகம் வழிநடத்தும் இந்த பாரத கலாச்சாரத்தில் வழிபாடு என்பது மிக முக்கியமான கருவியாக உள்ளது. கடவுள் வழிபாடு நமக்கான பொருட்தேவைகளுக்காக என்பதைத்தாண்டி அது உள்நிலை வளர்ச்சிக்காகவும், முக்தியை நோக்கியும் இருந்து வந்துள்ளது.

ஆன்மீகப் பாதையின் ஒவ்வொரு செயலும் நம்மை முக்தி நோக்கோடு பயணிக்க வைக்கும். அப்படித்தான் வருடத்தின் எல்லா நாட்களுமே அதற்கான விஞ்ஞான பூர்வமான பின்புலத்தோடு மெய்ஞானத்தை நமக்கு வழங்கும். ஒரு மாதத்தின் பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்கள் உடலை சமநிலைப்படுத்தி ஆன்மீகப் படிகளை எடுக்க ஏதுவான நாட்கள் என்பது பரவலாக நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி, ஏகாதசி என விசேஷ நாட்கள் வந்தாலும், வருடத்திற்கொருமுறை வரும் மஹாசிவராத்திரி, குரு பெளர்ணமி ஆகியவை நம் உள்நிலை வளர்ச்சிக்கு உகந்தவை என கருதப்படுகிறது.

தைப்பூசம், மஹாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர நிகழ்வுகள் விஞ்ஞான முறையிலும் மெய்ஞான முறையிலும் நம்மை மெருகேற்ற உதவும் நாட்களாகும். அப்படி இந்த மாசி மாதத்தில் வருவதுதான் மஹாசிவராத்திரி. பண்டைய காலத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட மஹாசிவராத்திரி, காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது எனுமளவிற்கு குறைந்துபோனது. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும், அதில் யாரோ ஒரு சில பெரியவர்கள் அமர்ந்து கதாகாலட்சேபம் கேட்டு பஜனை பாடுவார்கள். வீட்டில் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கூட சம்பிரதாயமாக இருப்பதைப்போல சூழல் உருவாகியுள்ளது. மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை முழுமையாக புரியாமலேயே கடந்த சில தலைமுறையினர் சென்றுவிட்டது பெருஞ்சோகம்.

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் மஹாசிவராத்திரி தற்போது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று உலகமே கவனிக்கும் விதமாக ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. வயது, பாலினம், இனம் என எவ்வித பேதங்களும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் இரவு முழுக்க விழித்திருந்து சிவநாமம், மந்திர உச்சாடனைகள் செய்து அந்த சக்திமிக்க இரவை பயனுள்ள வகையில் கழிக்கிறார்கள்.

மஹாசிவராத்திரி குறித்த பெரும்பாலான கட்டுரைகளில் பொருள் வளம், செல்வ வளம் மற்றும் அதைச்சார்ந்த நன்மைகள் குறித்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னுள்ள அற்புதமான விஞ்ஞானமும், அதனூடே உள்ள மெய்ஞானமும் அடியோடு மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்து ஆன்மீக அமைப்புகள் இந்த விஞ்ஞான அடிப்படைகளை சொல்லித்தந்ததால் தர்க்கரீதியான இன்றைய தலைமுறை அதனை கவனிக்கிறார்கள்.

முதுகுத்தண்டு நேராக வைத்திருத்தல் இந்த நாளின் சிறப்பை நாமும் கிரகித்துக் கொள்ளலாம் என்பது அனைவரும் புரிந்துகொண்டு செய்யக்கூடியதாக இருக்கிறது. அதோடு ஈஷா நடத்தும் மஹாசிவராத்திரி விழாவில் அந்த இரவைக் கழிக்க ஆன்மீகம், உற்சாகமான ஒரு விஷயமாக தெம்பூட்டும் ஒரு நிகழ்வாக வழங்கப்படுகிறது. இசை, நடனம், மந்திர உச்சாடனைகள் மற்றும் மஹா அன்னதானம் என இனிய இரவாக இருப்பதால் கூட்டம் கூட்டமாய் லட்சக்கணக்கில் ஈஷாவிற்கு வருகிறார்கள் இந்த மண்ணின் சாமானிய மனிதர்கள். குறிப்பாக, அதிகளவில் இளைஞர்களை ஆன்மீகம் நோக்கி ஈர்க்கும் விழாவாக இது மாறியுள்ளது.

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி யார் வேண்டுமானால் கலந்து கொள்ள முடியும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி முன்பதிவும் செய்து கொள்ளலாம்

https://isha.sadhguru.org/mahashivratri/attend-in-person/

இந்த கலாச்சாரத்தின் அற்புதமான நெறிமுறைகளை, ஆன்மீக சாராம்சங்களை உணர்ந்து நம் வாழ்வினை கொண்டாட்டமாக நடத்திட ஈசனின் அருள் நமக்கு உதவும்.

Tags:    

Similar News