தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராய விவகாரம்- கைதான 3 பேருக்கு ஜூலை 5-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

Published On 2024-06-21 03:46 GMT   |   Update On 2024-06-21 03:46 GMT
  • கள்ளச்சாராய விவகாரத்தில் கைதான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • பாதிக்கப்பட்டவர்களால் கைதானவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 47 உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் கைதான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட நீதிமன்றம் கருணாபுரம் பகுதியில் அமைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களால் கைதானவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோருக்கு ஜூலை 5-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இதனிடையே, மெத்தனால் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருதால் . சின்னதுரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News