தமிழ்நாடு

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. நினைவு மணிமண்டபம்: முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

Published On 2022-12-02 15:10 IST   |   Update On 2022-12-02 15:10:00 IST
  • கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
  • கோவில்பட்டி மணிமண்டபத்தில் உள்ள கி.ரா. சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி:

கரிசல் இலக்கியத்தின் தந்தையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கோவில்பட்டி மணிமண்டபத்தில் உள்ள கி.ரா. சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் மகாலெட்சுமி சந்திரன், சப்-கலெக்டர் மகாலெட்சுமி மற்றும் கி.ரா.வின் மகன்கள் திவாகரன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News