தமிழ்நாடு

ரெயிலில் பாலியல் தொல்லை- 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழந்த சோகம்

Published On 2025-02-08 14:58 IST   |   Update On 2025-02-08 14:58:00 IST
  • தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
  • 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக நேற்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.

கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.

இந்நிலையில், ஓடும் ரெயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவம் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News