தமிழ்நாடு

ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளின் ஈகோ பிரச்சனையால் டெல்லியில் பா.ஜ.க. வெற்றி: திருமாவளவன்

Published On 2025-02-08 14:39 IST   |   Update On 2025-02-08 14:39:00 IST
  • டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது.
  • இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.

திண்டுக்கல்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது. சமூக ஊடகங்களில் கூட வாக்காளர்களுக்கு அந்த கட்சியினர் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், ஆம் ஆத்மி ஈகோ பிரச்சனையால் பிரிந்து தேர்தலை சந்தித்தது. இது பா.ஜ.க. வெற்றிக்கு பெரிதும் உதவியாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது.

பாராளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தான் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை வீழ்த்த முடியும். இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News