தமிழ்நாடு

கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2025-02-08 14:34 IST   |   Update On 2025-02-08 14:34:00 IST
  • சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர்.
  • கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருகே கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

சுற்றுலா தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இதன் அருகேயே ஆழியார் அணை, அணை பூங்காவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர். பின்னர் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்து செல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவுகிறது. மழை குறைந்து விட்டதால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.

தற்போது அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கவியருவியில் தண்ணீர் குறைந்ததால், கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கவியருக்கு வந்தனர். ஆனால் குளிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News