ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வி- எல்.முருகன்
- 10 நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 70 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்தனர்.
- ராகுல் காந்தி ஹத்ராஸ் சென்றார். ஆனால் முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கு கூட வரவில்லை.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறுகையில்,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் உயிரிழந்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
10 நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 70 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்தனர். தமிழக முதலமைச்சர் காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தை கட்டுப்படுத்துகிறார். அதில் அவர் தோல்வியடைந்து உள்ளார்.
ராகுல் காந்தி ஹத்ராஸ் சென்றார். ஆனால் முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கு கூட வரவில்லை. அரசியல் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.