தமிழ்நாடு

மகா சிவராத்திரி, பிரதோஷம்- பஞ்சபூத, நவ கைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-02-10 06:35 GMT   |   Update On 2023-02-10 06:35 GMT
  • கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது.
  • நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நெல்லை:

மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டம் சார்பில் வரும் 18-ந் தேதி மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தையொட்டி நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து இரவு 8 மணிக்கு பஞ்ச பூத தலங்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் நெல்லை புதிய பஸ்நிலையம், சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் 18-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு நவ கைலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சங்கரன்கோவில் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையங்களில் இன்று (10-ந் தேதி) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News