தமிழ்நாடு
பிரதமர் மோடி சென்னை வருகை - கவர்னர், முதலமைச்சர் வரவேற்றனர்

பிரதமர் மோடி சென்னை வருகை - கவர்னர், முதலமைச்சர் வரவேற்றனர்

Published On 2023-04-08 15:01 IST   |   Update On 2023-04-08 16:15:00 IST
  • பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
  • சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News