'போதையில்லா தமிழ்நாடு' என்ற தி.மு.க.-வின் தேர்தல் வாக்குறுதி என்னவானது?- பிரேமலதா
- தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
- கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
* குறைந்த விலையில் கிடைத்ததால் பலரும் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர்.
* டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர்.
* தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.
* தேர்தல் அரசியல் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எந்த புதிய திட்டமும் இல்லை.
* அதிகாரிகளை மாற்றி விட்டால் மட்டும் போன உயிர்கள் திரும்பி வந்துவிடுமா?
* எந்த சம்பவம் நடைபெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடாவா? அதிகாரிகளை இடம் மாற்றுவதுதான் நடவடிக்கையா?
* கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டுள்ளது.
* போதையில்லா தமிழ்நாடு உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.