தமிழ்நாடு
சங்கரன் கோவில் கொலை வழக்கு- 4 பேருக்கு மரண தண்டனை
- கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு அளிப்பு.
- நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.
2014ம் ஆண்டு சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 பேருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.
அதன்படி, பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.