தமிழ்நாடு
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை... பாஜகவை விமர்சித்த மு.க.ஸ்டாலின்
- 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
- இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
சென்னை:
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
அவ்வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.