காஞ்சிபுரத்தில் 2 இடங்களில் புதிய பஸ்நிலையம் அமைக்க இடம் தேர்வு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
- பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குமார் உடன் இருந்தனர்.