தமிழ்நாடு
தலைவரின் சொல் மாறப்போவது இல்லை- அண்ணாமலையின் பேச்சுக்கு அமர்பிரசாந்த் ரெட்டி கருத்து
- சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை.
- 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம்.
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் தேர்தலில் தனித்து போட்டியிடவே விருப்பம் என்றும் சென்னை அமைந்தகரையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
அண்ணாமலையின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக நிர்வாகியான அமர்பிரசாந்த் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் என கூறியுள்ளார்.