தமிழ்நாடு

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி- அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு

Published On 2022-07-27 03:57 GMT   |   Update On 2022-07-27 04:00 GMT
  • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் நடைபெற உள்ள மாமல்லபுரத்துக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று வந்தடைந்தது.
  • ஜோதிக்கு அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் இந்த ஜோதி 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் தமிழகத்தை அடையும் இந்த ஜோதி, ஜூலை 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் நடைபெற உள்ள மாமல்லபுரத்துக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News