தமிழ்நாடு

விடுபட்ட 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு நவ.10 முதல் 'மகளிர் உரிமை தொகை'

Published On 2023-11-08 04:09 GMT   |   Update On 2023-11-08 05:47 GMT
  • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
  • 2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை:

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியான நிலையில் முதல் நிகழ்ச்சியாக நாளை மறுநாள் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News