தமிழ்நாடு

காஞ்சிபுரம் கோவில்களில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு

Published On 2023-09-21 10:55 IST   |   Update On 2023-09-21 10:55:00 IST
  • பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
  • விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கரமடம் ஆகியவற்றில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வந்த அவரை அறங்காவலர் குழுவின் உறுப்பினர் வ.ஜெகன்னாதந், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, தியாக ராஜன், சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை கோவில் ஸ்தானீகர்கள் சியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள், கோவில் மணியக்காரர் சூரியநாராயணன், சங்கர மடத்தின் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகாபெரியவர் அதிஷ்டானத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மடத்தின் நிர்வாகி கீர்த்தி வாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பிருந்தாவனத்தில் மகா பெரியவர் கிரீடம் அணிந்தும் தங்க ஹஸ்தத்துடனும் ஜெயேந்திரர் மயில்தோகை அலங்காரத்திலும் காட்சி அளித்தார்.

பிருந்தாவனத்தின் அர்ச்சகர் பாலாஜி சங்கர மடத்தின் சிறப்புகள் மற்றும் காஞ்சி மடாதிபதிகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிக் கூறினார். விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

Tags:    

Similar News