தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராய உயிரிழப்பு 47 ஆக உயர்வு.. 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்- ஆட்சியர் அதிர்ச்சி தகவல்

Published On 2024-06-21 03:20 GMT   |   Update On 2024-06-21 03:39 GMT
  • 29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கள்ளக்குறிச்சி, ஜிப்மர், சேலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக 165 பேர் சேர்ந்தனர். இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

* சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* 29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

* அரசு அறிவித்த நிவாரணம் உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் இன்று நிவாரணம் வழங்கப்படும்.

* பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* பார்வை குறைபாட்டுடன் வந்த 99 சதவீத நோயாளிகள் குணமடைந்து விட்டனர்.

* கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

* கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரவேண்டும். சாராயம் அருந்திவிட்டோமோ என்ற சந்தேகம் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.

Tags:    

Similar News